சிறுபான்மை நலத்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் சேந்தமங்கலம் அரசு கலை கல்லூரி மாணவி மாவட்ட அளவில் மூன்றாமிடம்

Update: 2023-08-29 05:05 GMT

பேச்சுப்போட்டியில் மூன்றாமிடம்  

சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி த.நந்தினி நாமக்கல் மாவட்ட சிறுபான்மை நலத்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றார். இதன் தொடர்ச்சியாக 23.8.2023 அன்று சென்னை தூய தோமையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இவருக்கு ரூ5000 க்கான காசோலை மற்றும் பாராட்டுக் சான்றிதழை வழங்கினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சிறுபான்மையர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், மாநில சிறுபான்மை நலத்துறை தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலர் ரீட்டா ஹரிஸ் தாக்கர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு பெற்றவர்களை பாராட்டினர்.

இதனையொட்டி இம்மாணவிக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர். தி.பாரதி பரிசு பெற்ற மாணவி நந்தினியை பாராட்டி பேசினார். இதில் இணைப்பேராசிரியர் முனைவர் வா.செந்தில்குமரன், உடற்கல்வி இயக்குநர் முனைவர். மொ.ரவி,தமிழ்த்துறை தலைவர் ஞா.கலையரசி , துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணாக்கர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News