பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர அதிமுக ஆலம்பாளையம் பேரூராட்சி திமுக, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய அதிமுக, பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் மற்றும் படைவீடு பேரூராட்சி அதிமுக சார்பில் ஆவரங்காடு எம்ஜிஆர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் அதிமுக நகர செயலாளர் முன்னாள் நகர்மன்ற தலைவருமான வெள்ளியங்கிரி, முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான செந்தில், ஆலாம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் செல்லதுரை மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், வார்டு கிளைக் கழகச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.