அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்
குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடந்தது. குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொருவரும் தாங்கள் படித்த தருணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறுவனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. வசதி இல்லாத மாணவ, மாணவியர்களுக்கு உதவுதல், கல்லூரிக்கு தேவையான அத்தியாவசியமான உபகரணங்கள் வாங்கி தருவது, ஒவ்வொரு ஆண்டும் சங்க கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டு, புதிய மாணவ, மாணவியர்களுக்கு அரசு கல்லூரியின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தல், அரசு தேர்வுக்கு தேவையான உதவிகளை புதிய மாணவ, மாணவியர்களுக்கு செய்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கணிதத்துறை மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் வாசுதேவன், பத்மாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.