காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

Update: 2023-09-15 04:53 GMT

அமாவாசை சிறப்பு பூஜை

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.

சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு, காலை 6 மணிமுதல் மாலை வரையில் மூலவருக்கு பல்வேறு மூலிகை திரவியங்களைக் கொண்டு, அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் உட்பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வாணையருடன் சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News