அரியாகவுண்டம்பட்டி ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோவிலில் அம்மாவாசை சிறப்பு பூஜை : பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-09-15 04:58 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அரியாகவுண்டம்பட்டி கிராமத்தில் கொங்கலம்மன் கோவில் அருகில் அருள்மிகு ஸ்ரீ சண்டி கருப்பசாமி ஸ்ரீ நாககன்னி ஆலயம் அமைந்துள்ளது. 33 அடி உயரம் கொண்ட ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோவிலில் ஒவ்வொரு அம்மாவாசை மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் சிறப்ப பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம் அதன்படி ஆவணி அமாவாசை முன்னிட்டு ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீ சண்டி கருப்பசாமிக்கு பல்வேறு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரங்கள் செய்து மகாதீபாரணை நடைபெற்றது. தொடர்ந்து வேண்டுதல் வைத்த பக்தர்கள் ஏராளமானோர் நெய்விளக்கு ஏற்றி, பொங்கல் வைத்து சாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரி ராஜேந்திர சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News