நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் - மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டிற்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும், வாழ்நாள் முழுவதும் ஓயாது பாடுபட்ட உத்தமர் - பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 ல் நாமக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பாக திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகர கழக செயலாளர் தா.கார்த்திகேயன், ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் ஜி.தங்கவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.நடேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நகர திமுக செயலாளர் தா.கார்த்திகேயன், நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையில் பேரணி நடந்தது. இதில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், சுற்றுச்சூழல் அணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் வட்டூர் ஜி.தங்கவேல், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜவேல், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ், தலைமை கழக பேச்சாளர் முரசொலி முத்து மற்றும் சார்பு அணி மகளிர் அணி தொண்டர் அணி நகர்மன்ற உறுப்பினர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அண்ணா சிலை அருகில் இருந்து பேரணி புறப்பட்டு நகராட்சி அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கும் நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.