புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார்
திருச்செங்கோடு ஜேசிஐ டிவைன் சார்பில் புகையிலை ஒழிப்பு மற்றும் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஜேசிஐ வார விழாவை ஒட்டி திருச்செங்கோடு ஜேசிஐ டிவைன் சார்பில் புகையிலை ஒழிப்பு மற்றும் வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி பேரணிநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அருகே நிறைவடைந்தது.
பேரணியில் சென்றவர்கள் புகையிலை போதை பொருட்கள் பயன் படுத்தக் கூடாது, போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட கூடாது என முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர். நிகழ்ச்சியியல் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, ஜேசிஐ டிவைன் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.