நாடக மன்றம் சார்பில் கலை திருவிழா
இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலை திருவிழா நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 06:15 GMT
கலைத் திருவிழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்ககம் சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழா நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கலைத் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைக்குழுவினர்களுக்கு, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.