ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தமிழர் தேர்வு... யார் இவர்?

2023ம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையை சேர்ந்த செல்வா திருமாறனை ஆசிய தடகள கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளது.

Update: 2023-07-06 07:58 GMT

அண்மையில் கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் செல்வா திருமாறன் மும்முறை தாண்டுதல் பிரிவில் 16.79 மீ. நீளம் தாண்டி, தங்கம் வென்று ஜூனியர் தேசிய சாதனை படைத்தார். மேலும், 16 ஆண்டுகளுக்கு முன்னர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பீர்ந்தர் சிங் என்பவர் மும்முறை நீளம் தாண்டுதலில் 16.63 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்த நிலையில், ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக செல்வ திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த செல்வா திருமாறன்?

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான திருமாறன் என்பவரின் மகன் செல்வ திருமாறன். இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் தற்போது கியூபாவை சேர்ந்த யோண்ட்ரிஸ் என்பவரது பயிற்சியின் கீழ், பயிற்சி மேற்கொண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 16 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பீர்ந்தர் சிங் என்ற தடகள வீரர் மும்முறை நீளம் தாண்டுதலில் 16.63 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது.

இந்நிலையில் ஏசியன் அத்தலட்டிக் அசோஷியன் சார்பில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள பிரிவில் சாதனை செய்ததற்காக 2023ம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக செல்வ திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூலை 10ம் தேதி பாங்காக்கில் நடைபெறும் விழாவில் செல்வ திருமாறனுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News