டேராடூனில் உள்ள ராஷ்டி ரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை தகுதி தேர்வு

Update: 2023-09-13 05:09 GMT

 இந்தியன் மிலிட்டரி தகுதி தேர்வு

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் ஜீலை 2024 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தகுதித் தேர்வு 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இராணுவ கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 01.07.2024-ல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் (Recognised School) ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 02.07.2011 –க்கும் 01.01.2013-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம் மற்றும் www.rimc.gov.in என்ற இணையத்தளம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். முகவரி ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளில் எழுதியிருத்தில் வேண்டும். கட்டணம் The Commandant RIMC, Dehradun என்ற பெயரில் State Bank of India, Tel Bhavan, Dehradun (Bank Code – 01576), Uttarakhand-இல் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாகப் பெற்று

THE COMMANDANT

RASHTRIYA INDIAN MILITARY COLLEGE,

DEHRADUN CANTONMENT,

DEHRADUN – 248 003,

UTTARAKHAND STATE

என்ற முகவரிக்கு தனிநபர் விண்ணப்பத்துடன் அனுப்புதல் வேண்டும். தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட விண்ணப்ஙகள் நிராகரிக்கப்படும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினர்கள் விரைவுத் தபாலில் பெற ரூ. 600/-ம், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.555/-ம், ஜாதிச்சான்றுடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்படிவம், பிற விவரங்கள் மற்றும் முந்தைய ஆண்டுத் தேர்வுகளின் விடைத்தாள்களையும் பெற்றுக்கொள்ளலாம். ஜாதிச்சான்றுடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்படிவம், பிற விவரங்கள் மற்றும் முந்தைய ஆண்டுத் தேர்வுகளின் விடைத்தாள்களையும் பெற்றுக்கொள்ளலாம். டேராடூனிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு இரட்டை பிரதிகளில்

CONTROLLER OF EXAMINATIONS,

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION,

CHENNAI – 600 003.

என்ற முகவரியில் 15.10.2023 அன்று 5.45 மணிக்குள் சென்று சேரத்தக்க வகையில் அனுப்பிவைத்தல் வேண்டும்.

02.12.2023-ல் நடைபெறும் எழுத்துத் தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத இயலும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த அரியவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீர்ர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233079 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News