திருச்செங்கோடு சரக காவல் நிலையங்களில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆய்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் நிலைய சரக காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள கோப்புகளை சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சரக உட்கோட்ட காவல் நிலையங்களான திருச்செங்கோடு நகர காவல் நிலையம், ஊரக காவல் நிலையம், மொலசி, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம்,வெபப்படை, பள்ளிபாளையம், குமாரபாளையம், ஆகிய திருச்செங்கோடு சரக்கத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள கோப்புகளை சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார் ஒவ்வொரு கோப்புகளும் முறையாக பராமரிக்கப்படுகிறதா பொதுமக்களின் புகாருக்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா எனவும் முதலமைச்சர் புகார், மற்றும் நூறு எண் புகாருக்கு காவல்துறையின் நடவடிக்கை எவ்வாறு உள்ளது எனவும் ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் மற்றும் காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உடனிருந்தனர். ஆய்வின் முன்னதாக காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தி மரக்கன்றுகளை டி ஐ ஜி ராஜேஸ்வரி நட்டு வைத்தார்.