ஆக. 14 துக்க நாளாக அனுஷ்டித்த பா.ஜ.க.வினர்
குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர் ஆக. 14 ஐ துக்க நாளாக அனுஷ்டித்தனர்.
பாகிஸ்தானை பிரித்ததால் தேச பிரிவினை நாளான, ஆக. 14 ஐ துக்க நாளாக அனுஷ்டிக்கும் விதமாக பா.ஜ.க.வினர் குமாரபாளையத்தில் ராஜம் தியேட்டர் முதல் நகராட்சி அலுவலகம் வரை மவுன ஊர்வலம் வர அனுமதி கேட்டனர். இதற்காக பா.ஜ.க.வினர் ராஜம் தியேட்டர் முன்பு நேற்று மாலை 04:00 மணியளவில் பெருமளவில் திரண்டனர். ஆனால் மவுன ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதனால் நகராட்சி அலுவலகம் முன்பு, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தி, துக்க நாளை அனுஷ்டிக்கும் விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் உள்ளிட்ட போலீசார் கலைந்து செல்லும்படி பலமுறை அறிவுறித்தியும், பா.ஜ.க.வினர் கலைந்து செல்லாமல் இருந்ததால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதில் பா.ஜ.க. பொது செயலர் சுபாஷ் தலைமையில், மாவட்ட துணை தலைவர் நாகராஜ், பார்வையாளர் சிவகாமி பரமசிவம், மண்டல் தலைவர் சேகர், உள்பட பலர் பங்கேற்றனர்.