போதைப் பொருள் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு

Update: 2023-08-12 06:13 GMT

விழிப்புணர்வு

எலச்சிபாளையம் போலீசார் சார்பில், மாணவர்களிடையே போதைப் பொருள் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

எலச்சிபாளையம் அருகே உள்ள, வையப்பமலை கவிதாஸ் தனியார் கல்லூரி, விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சக்கராம்பாளையம் வித்யா பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எலச்சிபாளையம் ராமச்சந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ.,ராமச்சந்திரன் தலைமையில், மாணவர்களிடையே போதைப்பொருட்கள் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் யாராவது போதைப் பொருட்களுக்கு அடிமையாகியிருந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தி நல்வழிப்படுத்துதல் குறித்தும் போலீசார் மாணவர்களிடையே உரையாடினர். மேலும், மாணவர்கள் போதைப் பொருட்களை தடுத்தல் குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News