கருணாம்பிகை தாயார் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா:
Update: 2023-07-22 06:34 GMT
கருணாம்பிகை தாயார்
மணலிஜேடர்பாளையம் கருணாம்பிகை தாயார் கோவிலில் நேற்று, ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு விழா நடந்தது.
எலச்சிபாளையம் அருகே உள்ள, மணலி ஜேடர்பாளையத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கருணாம்பிகை தாயார் உடனுறை ஆதீனாக அருளீஸ்வரர் கோவிலில் நேற்று, 7ம்ஆண்டு ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு, அம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்து மாலை 5மணி முதல் 7மணி வரையில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.