மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல் சிமெண்ட் சாலை புதுப்பிக்க பூமிபூஜை

Update: 2023-07-17 11:27 GMT

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், ரூ.42.50லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட, காளிப்பட்டி, பாலிக்காடு, அம்பேத்கர் தெரு, முனுசாமி பிள்ளை தெரு, லட்சுமிபுரம், வெங்கடேசா தெரு, பாரதியார் தெரு, கஸ்தூரிபாய் வீதி, வையப்பமலை ரோடு சந்து உள்ளிட்ட பகுதிகளில், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் - 2022-23 ன் கீழ், ரூ. 42.50 லட்சம் மதிப்பீட்டில், பூமி பூஜை போடப்பட்டது. டவுன் பஞ்சாயத்து தலைவர் திருமலை தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரவிக்குமார், வார்டு உறுப்பினர்கள், டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News