திருச்செங்கோடு நகராட்சியில் காலை உணவு திட்ட மையம்

மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு

Update: 2023-08-11 05:32 GMT

மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி இராஜகவுண்டம்பாளையத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மைய சமையல் கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மைய சமையல் கூடத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தயாரிப்பதற்கான வசதிகள் குறித்து அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

தொடர்ந்து, திருச்செங்கோட்டில் மலர் அரசன் திரையரங்கத்திற்கு உரிமை வழங்குவது குறித்தும், திரையரங்கில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தீயணைப்பு சாதனங்கள், அவசரகால வழி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், புதுபுளியம்பட்டியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News