ரோட்டரி இன்னர் வீல் சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி
திருச்செங்கோடு ரோட்டரி இன்னர் வீல் சங்கம் சார்பில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழாவை ஒட்டி விழிப்புணர்வு பேரணியை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார்.
திருச்செங்கோடுரோட்டரி இன்னர்வீல் சங்கத்தின் சார்பில் தாய்பால் வார விழாவை ஒட்டி தாய்ப்பாலின் மகத்துவம் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது . திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் இருந்து துவங்கிய பேரணியை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார் நான்கு ரத வீதிகள் வழியாக நடந்த இந்த பேரணியில் நகர் மன்ற உறுப்பினர்கள் தாமரைச்செல்வி, மணிகண்டன், மனோன்மணி, சரவண முருகன், செல்லம்மாள், தேவராஜன், திவ்யா, வெங்கடேஸ்வரன் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட நகர்ப்புற அலுவலர் வித்யாலட்சுமி, ஊரகப்பகுதி அலுவலர் மோகனா மற்றும் இன்னர் வீல் சங்க நிர்வாகிகள், டி.சி.எம்.எஸ் நிர்வாகிகள், அரசு மருத்துவமனை செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நான்கு ரத வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் சென்றவர்கள் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தியபடி சென்றனர்.