ராசிபுரம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும் முகாம்
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மகளிருக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் அரசு மருத்துவமனை, ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டி.ஜெயந்தி தலைமை வகித்தார்.
ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் பி.சீனிவாசன் முகாமினை துவக்கி வைத்தார். அரசு மகப்பேறு மருத்துவர் சியாமளா, ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் ஏ.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜென் ஒர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு முறைகள், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரோட்டரி சங்கச் செயலர் வி.ஆர்.எஸ்.அனந்தகுமார், துணைத் தலைவர் இ.ஆர்.சுரேந்திரன், முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், எஸ்.பிரகாஷ், எஸ்.கதிரேசன், ஏ.ரவி, நிர்வாகிகள் பி.கண்ணன், எம்.முருகானந்தம், ஜி.தினகர், பி.தனபால் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.