குழந்தைகள் உரிமைகள் மற்றும் ஊடகங்களின் பங்கு
யுனிசெப் நிறுவனம், தோழமை தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் ஊடகங்களின் பங்கு
யுனிசெப் நிறுவனமும் தோழமை தொண்டு நிறுவனமும் இணைந்து குழந்தைகள் உரிமைகள் மற்றும் ஊடகங்களின் பங்கு என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நாமக்கல் கோஸ்டல் ரெசின்சியில் நடத்தின.
இந்நிகழ்ச்சியில் தோழமை தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் தேவநேயன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட குழந்தைகள் நலக் குழும தலைவர் சதீஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
குழந்தைகள் உரிமைகளில் யூனிசத்தின் பங்கு என்பது குறித்து, தமிழ்நாடு மற்றும் கேரள மாநில யூனிசெப் அலுவலர் ஷாம் சுதீப் பண்டி உரையாற்றினார். குழந்தைகள் உரிமைகள் நிபுணர் வழக்கறிஞர் கிறிஸ்துராஜ் குழந்தைகளின் உரிமைகள் குறித்து உரையாற்றினார். சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மணி, குழந்தையின் உரிமைகளில் ஊடகங்களின் பங்கு குறித்து உரையாற்றினார்.
தோழமை தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும், சட்டப்படியாக குழந்தைகளுக்கு கிடைக்கும் உதவிகள் குறித்தும் ஊடகங்கள் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பங்களிப்பு குறித்தும் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இறுதியாக நன்றி கூறினார்.