ஆசிரியர் தின விழாவில் ஆசிரிய பெருமக்களுக்கு நகர மன்ற தலைவர் பாராட்டு

Update: 2023-09-05 11:37 GMT

 நகர மன்ற தலைவர் பாராட்டு

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் த. விஜய்கண்ணன் ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறி, சிறப்பாக பணிபுரிந்த வர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். மேலும் ஜே.கே.கே.சுந்தரம் நகர் தொடக்கப் பள்ளியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி‌ டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஓ.ஆர்.செல்வராஜ், பொறுப்பு குழு உறுப்பினர் செந்தில்குமார், கந்தசாமி, நகர மன்ற உறுப்பினர்கள் அழகேசன், வேல்முருகன், கோவிந்தராஜ், கதிரவன் சேகர், பரிமளம் கந்தசாமி, கனகலட்சுமி கதிரேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜுல்பிகார் அலி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், 5 வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெருமாள், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அன்பரசு, ராஜேந்திரன், ராஜ்குமார்,இளங்கோ , மற்றும் ஜே.கே.கே. சுந்தரம் நகர் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரிய பெருமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News