நகராட்சி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி மற்றும் மாஸ் கிளீன்
குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி மற்றும் மாஸ் கிளீன் நடந்தது.
குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை எனும் பெயரில் அரசு வழிகாட்டுதல் படி விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கியது. ஆணையாளர் சரவணன் தலைமை வகிக்க, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இதில் அரசு கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று, விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறும் சென்றனர். பல முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி, மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்பட கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்றனர். காவிரி ஆற்றங்கரையோரம் மாஸ் கிளீன் செய்யப்பட்டது. சுகாதார பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர்.