மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பா.ஜ.க அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில், இரு இன மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால்
தொடரும், கலவரத்தை, படுகொலையை,தீ வைப்பு சம்பவத்தை தடுத்து நிறுத்தாமல், மௌனமாக வேடிக்கை பார்த்து நிற்கிற
ஒன்றிய அரசு பிஜேபி அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட
மணிப்பூர் மாநில மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும்,
ஆயுத குழுக்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்யவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது..
அதன் ஒரு பகுதியாக ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராசிபுரம் நகர ஒன்றிய குழு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,
ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர்
S.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி பி ஐ
மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் N.கார்த்திகேயன்
கண்டன உரை ஆற்றினார். மாநில துணைச் செயலாளர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்
T.P. லலிதா, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்டச் செயலாளர்
S. மீனா,மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், சிபிஐ
T.N. கிருஷ்ணசாமி, சிபிஐ குமாரபாளையம் நகர செயலாளர்
K. கணேஷ் குமார், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர்
P.R. செங்கோட்டுவேல், ராசிபுரம் ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர்
R. ராஜா,மாநில துணைத்தலைவர் , புரச்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
R. தேவகி, திராவிடர் விடுதலைக் கழகம் நகரச் செயலாளர்
R.பிடல் சேகுவேரா ,நகர துணைச் செயலாளர் சாதிக்,நகரகுழு உறுப்பினர் ராஜா,வெண்ணந்தூர் ஒன்றிய குழு மாதேஸ்வரி, நகர குழு உறுப்பினர் பயாஸ்,
தி.வி.க.நகர அமைப்பாளர் சுமதி மதிவதனி, இளைஞர் பெருமன்ற தாலுக்கா தலைவர்
வேம்பு, வெண்ணந்தூர் மணி, சின்டெக்ஸ் டேங்க் தொழிற் சங்கத் தலைவர் பாஸ்கர், நவனி செங்கோட்டையன், நகரப் பொருளாளர் சலீம், நன்றியுரை கூறினார்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்..