இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பழனி ஒன்றியக்குழு சார்பில், மத்திய அரசை கண்டித்து நெய்க்காரப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் அரவிந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, சி.ஏ.ஜி. அறிக்கையின்படி மத்திய பா.ஜ.க. அரசு பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், எனவே பா.ஜ.க. அரசு பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலுக்கு முயன்றனர். ஆனால் அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஆர்ப்பாட்டம் செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 8 பெண்கள் உள்பட 26 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.