குப்பை சேகரித்தல் குறித்த புகார் நகர மன்ற தலைவர் பொதுமக்களிடம் குறைகேட்பு
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் மூலம் வீடுகளிலிருந்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் பணி அண்மை காலமாக நடைபெற்று வருகிறது. வார்டு எண் 13 மற்றும் 5 உட்பட்ட பகுதிகளில் சரியாக வீடுகளில் குப்பைகளை வாங்குவதில்லை என பொதுமக்கள் அளித்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அப்பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட நகர மன்ற தலைவர் த.விஜய்கண்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பின்பு தனியார் ஒப்பந்த சுகாதார மேற்பார்வையாளர்களிடம் பொதுமக்கள் மத்தியில் புகார் இல்லா வகையில் அனைத்து வீடுகள் தோறும் தினமும் குப்பைகளை சேகரிக்கும் பணிகளை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ஜான் ராஜா, சந்தான கிருஷ்ணன் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் உடன் இருந்தனர்.