ஏமப்பள்ளி ஊராட்சியில் கான்கிரீட் சாலை பணிகள் - மதுரா செந்தில் துவக்கி வைத்தார்
Update: 2023-09-20 11:52 GMT
கான்கிரீட் சாலை பணி
திருச்செங்கோடு ஒன்றியம், ஏமப்பள்ளி ஊராட்சி, அம்மன் நகர் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெருவில் ரூ.6,80,000 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகாலுடன் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது. நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் ஜி.தங்கவேல், ஒன்றிய பெருந்தலைவர் M.சுஜாதா தங்கவேல், மொளசி ஊராட்சி மன்ற தலைவர் R.மீனாட்சி ராஜமாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் S.பிரியா சுரேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.