அத்தியாவசிய விலைவாசி உயர்வை கண்டித்து சி.பி.எம் சார்பில் ரயில் மறியல் போராட்டம்

Update: 2023-09-07 11:27 GMT

ரயில் மறியல் போராட்டம் 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், ஜி.எஸ்.டி கூடுதல் வரி சுமையால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதாகவும், பெட்ரோல், டீசல் உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 7 ஆயிரத்து 500 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது. '

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், எலச்சிபாளையம், காவிரி ஆர் எஸ் ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த காவேரி ஆர்.எஸ் பகுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமையில் விவசாய தொழிலாளர் அமைப்பினர், தொழிற்சங்கத்தினர்,மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் என சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்த கூட்ஸ் வண்டியை மறித்து ரயில் மறியல் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் மற்றும் பள்ளிபாளையம் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Tags:    

Similar News