மல்லசமுத்திரத்தில் ரூ.10லட்சத்திற்கு பருத்தி ஏலம்
Update: 2023-07-22 06:26 GMT
மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையான மாமுண்டி உபகிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 450 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
இதில், சுரபி ரகம் ரூ.7116 முதல் ரூ.7305/வரையிலும், பி.டி.,ரகம் ரூ.6200முதல் ரூ.6895வரையிலும் என 10லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த பருத்தி ஏலம்28/07/2023 வெள்ளிக்கிழமை நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.