உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணம் வழங்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-29 05:35 GMT

 கண்டன ஆர்ப்பாட்டம்

முதியோர் ஓய்வூதியம் கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் என அனைத்து ஓய்வூதியங்களும் வழங்கப்படும் போது உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது அதனை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொழிலாளர் நல வாரியத்தில் கடந்த ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகிய நான்கு மாதங்களுக்கு உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நான்கு மாத ஓய்வூதிய பணம் வழங்காததை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஏ ஐ டி யூ சி பொதுத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏஐடியூசி சங்க மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். கட்டிட சங்க மாவட்ட துணை செயலாளர் கோபி ராஜ், கட்டிட சங்க மாவட்ட குழு கதிர்வேல், கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஓய்வூதியம் நான்கு மாதங்கள் வழங்காததால், வயதான முதியவர்கள் பாதிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உடனடியாக கருத்தில் கொண்டு ஓய்வூதிய தொகையை நிலுவை இல்லாமல் அரசு உடனே வழங்க வேண்டும். கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மாதம் ஐந்தாம் தேதிக்குள் ஓய்வூதியத் தொகையை வழங்க வேண்டும் ஓய்வூதியத்தை மாதம் 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 15 நல வாரியங்களில் கல்வி திருமணம் விபத்து மரணம் இயற்கை மரணம், கண் கண்ணாடி, மகப்பேறு உட்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் உதவித்தொகை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். வீடு இல்லாத உடல் உழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் வீட்டுமனை மற்றும் வீடு கட்ட ஐந்து லட்சம் மானியம் வழங்க வேண்டும். உடன் அழைப்பு ஓய்வூதிய பெண் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏஐடியுசி சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் உடல் உழைப்பு நல வாரிய உறுப்பினர் மங்கையர்கரசி ஆகியோர் கூறியதாவது, 15 நல வாரியங்களில் பல்வேறு நல வாரியங்களுக்கு ஓய்வூதியத் தொகை முறையாக வழங்கப்படுகிறது ஆனால் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய தொகை 4 மாதங்களாக நிலுவை வைக்கப்பட்டுள்ளது . இதனை நம்பி மருந்து மாத்திரைகள் வாங்கி வாழ்வாதாரமாக பயன்படுத்தி வரும் உடல் உழைப்பு தொழிலாளிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் . இது குறித்து அனைத்து தரப்புக்கும் மனு அனுப்பியும், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மன அனுப்பியும் வழக்கமாக பதில் வருவது போல் கூட பதில் கூட வரவில்லை. எனவே தமிழக அரசு இந்த பிரச்சினையை கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மருந்து வாங்க போதிய பணமில்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் எங்களது ஓய்வூதியம் நான்கு மாதங்களாக நிலுவையில் இருப்பதால் மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். தமிழ்நாடு அரசும் முதல்வரும் இதை கவனத்தில் எடுத்து விரைந்து எங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News