மணிப்பூர் சம்பவம் கண்டித்து காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
Update: 2023-07-27 05:00 GMT
மணிப்பூர் சம்பவம் கண்டித்து குமாரபாளையத்தில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மணிப்பூர் சம்பவம் கண்டித்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், மகளிர் குழுவினர் என பலதரப்பட்டவர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் காங்கிரசார் சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர துணை செயலர் சிவகுமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கோகுல்நாத், மனோகரன், சக்திவேல், உள்பட பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர்.