தென்னையில் சிகப்பு கூன் வண்டு கட்டுப்பாடு வழிமுறைகள் குறித்து விளக்கம்

Update: 2023-08-09 06:08 GMT

சிகப்பு கூன் வண்டு

தென்னை மரத்தில் கூன் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, மல்லசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மனசமுத்திரம் வட்டாரத்தில் சுமார் 1400 ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டு உள்ளது. தென்னையில் ஆங்காங்கே ரிங்கோபோரஸ் பெரோஜினியஸ் எனப்படும் சிகப்பு கூன் வண்டின் தாக்குதல் காணப்படுகின்றது. தென்னையைத் தாக்கும் பூச்சிகளில் அதிக சேதத்தை விளைவிக்க கூடியது இந்த சிகப்பு கூன்வண்டுகள். பொதுவாக 20 வயதுக்கு குறைவான மரங்களும் குட்டை ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களும் அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறது. குருத்து அழுகல் மற்றும் காண்டாமிருக வண்டின் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் பூங்கொண்டின் தாக்குதலுக்கு ஏதுவாக அமைகின்றது.

சிகப்பு கூன்வண்டானது தென்னை மரத்தின் துளையிடப்பட்ட துவாரங்கள் காயம் பட்ட பகுதி மற்றும் தண்டின் தாக்கப்பட்ட இடுக்குகளில் முட்டைகளை இடுகின்றன. முட்டை பருவமானது மூன்று முதல் ஐந்து நாட்கள் ஆகும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்களானது லேசான மஞ்சள் நிறத்துடன் கால்கள் இன்றி காணப்படும். ஆண்வண்டுகள் நீண்ட துதிக்கை போன்ற மூக்குடன் வாய் பாகத்தில் அடர்ந்து ரோமத்துடன் காணப்படும். புழுப்பருவமானது 60-90நாட்களாகும். பின்னர் புழுக்களில் இருந்து கூட்டுப் புழுக்கள் உருவாகி 14-21நாட்களில் வளர்ந்த வண்டாக வெளியேறும். வளர்ந்த வண்டுகள் சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் முதுகு பகுதியில் ஆறு புள்ளிகளுடன் காணப்படும். பொதுவாக வண்டுகளானது 60-70நாட்கள் வரை உயிர் வாழக் கூடியது. சிகப்பு பூங்கொண்டின் அனைத்து வளர் நிலைகளும் மரத்திலேயே நடைபெறுவதால் அதிக சேதத்தை உருவாக்குகிறது.

சிகப்பு கூன்வண்டால் தாக்கப்பட்ட மரத்தின் தண்டுகளில் ஓட்டைகளும், ஓட்டைகளில் வழியே மரத்திசுக்களை தின்றபின் வெளித்தள்ளப்பட்ட சக்கைகளும் காணப்படும். புழுக்கள் உச்சென்ற சிறிய துவாரத்தின் வழியே சிவப்பு நீர் வடிந்து பிசின் போன்று காணப்படும். புழுக்களானது தண்டின் உள்பகுதியில் உள்ள இளம் திசுக்களை தின்று மேல்நோக்கி செல்வதால் மரத்தின் மேல் பகுதி பலம் குறைந்து சில சமயங்களில் முறிந்து விழுந்து விடும். தாக்குதல் அதிகரிக்கும் நிலையில் இருந்து சத்துக்கள் மேல் பகுதிக்கு செல்வது தடுக்கப்பட்டு மரத்தின் உட்புற ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறிய பின்னர் கொண்டை பகுதி முறிந்து விடுவதால் மரமானது பட்டுவிடும். மரத்தின் தண்டு பகுதியில் கூர்ந்து கவனித்தால் புழுக்களில் இரையும் சத்தமானது கரும்பாலையில் கரும்பு பிழிவது போன்று கேட்கும்.

சிவப்பு கூன்வண்டின் தாக்குதலில் இருந்து மரத்தைக் மரங்களில் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் பச்சை ஓலைகளை தண்டிலிருந்து நாலடி விட்டு பின்னர் வெட்ட வேண்டும் ஓலைகளை தண்டை ஒட்டி வெட்டுவதால் வண்டுகள் முட்டையிட எளிதாக அமைகிறது. முற்றிலும் தாக்குதலுக்கு உள்ளான மரங்களை வெட்டி எரித்து விட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் இரண்டு மடங்கு, வேப்பம் புண்ணாக்கு ஒரு பங்கு கலந்த கலவையை மரத்திற்கு 250 கிராம் வீதம் மட்டை இடுக்குகளில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இடுவதால் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தி அவை தாக்கிய இடங்களில் சிவப்பு கூன்வண்டு முட்டையிடுவதை தவிர்க்கலாம். கரும்புச்சாறு 2.5லிட்டரில் ஈஸ்ட் மாத்திரைஐந்து கிராம் மற்றும் அசிட்டிக் அமிலம் ஐந்து மில்லி லிட்டர் கலந்து நீள்வாக்கில் வெட்டப்பட்ட மட்டை துண்டுகள் போடப்பட்ட பானைகளை ஏக்கருக்கு 30 வீதம் தோப்பில் வைத்து கூழ் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். மத்திய மலை தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தில் பரிந்துரையின்படி, கூழ்வண்டுகள் சேதமற்ற மரத்தில் காணப்படும் துளைப்பகுதிகளில் இமிடாகுளோபிரிட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மி.லி அல்லது ஸ்டினோசாட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி அல்லது இன்டாக்சாகார்ப் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மில்லி லிட்டர் கலந்து புனல் மூலம் மரம் ஒன்றிற்கு ஒரு லிட்டர் வீதம் ஊற்றிவிட்டு துணையை தார் அல்லது சிமெண்ட் பூச்சி மூலம் அடைத்து விட வேண்டும். பெரோலியூர் என்னும் இனக்கவர்ச்சி பொறியை எட்டருக்கு ஒன்று வீதம் தரையில் இருந்து ஐந்து அடி உயரத்தில் வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

தென்னையைத் தாக்கும் பூச்சிகளில் அதிக இழப்பை ஏற்படுத்துவது சிகப்பு கூழ்வண்டு என்பதால், மேற்கண்ட ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை கையாண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என அந்த செய்தி குறிப்புகள் தெரிவித்திருந்தார்.

Similar News