குமாரபாளையத்தில் ஆதரவற்ற பெண் மீட்பு
Update: 2023-07-27 05:02 GMT
ஆதரவற்ற பெண் மீட்பு
குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, மன நலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். மேம்பாலம் கீழே தினமும் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றுமுன்தினம் இந்த பெண்ணிடம் சில இளைஞர்கள் மது வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அவ்வழியே சென்ற சிலர் இதனை கண்டு, பொதுநல அமைப்பினரிடம் கூறினர். விடியல் ஆரம்பம் உள்ளிட்ட சில அமைப்பினர் இந்த பெண் குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்க, கலெக்டர் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை, மகளிர் உரிமைத் துறை மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகிகள் குமாரபாளையம் நேரில் வந்து இந்த பெண்ணை மீட்டு நாமக்கல் அழைத்து சென்றனர். எஸ்.ஐ. சந்தியா உடனிருந்தார்