குமாரபாளையம் அருந்ததியர் காலனியில் வளர்ச்சி பணிகள் நகர மன்ற தலைவர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க குமாரபாளையம் நகராட்சியில் அருந்ததியர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்கள் வசிக்கும் 1 வது வார்டு காந்தியடிகள் தெரு பூசாரிக்காடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதி, பொது கழிப்பிட பராமரிப்பு,தார் சாலை மற்றும் கான்கிரீட் சாலை வசதி, சமுதாயக்கூடம், உடற்பயிற்சி நிலையங்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நகர மன்ற தலைவர் த.விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். மேலும் மேற்கண்ட பணிகளை நிறைவேற்றுவதற்கு உரிய வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, 1 வது வார்டு திருமூர்த்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.