உலக காகித தினத்தை ஒட்டி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கல்

எருமப்பட்டியில் உலக காகித தினத்தை ஒட்டி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், மரக்கன்றுகள் வழங்கல்

Update: 2023-08-02 06:38 GMT

மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல் 

எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக காகித தினத்தை ஒட்டி நாமக்கல் மாவட்ட மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேசன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியன் தலைவர் செல்வகுமார் கலந்து கொண்டு 130 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் உங்கள் வேம்பு அரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.

அவர் பேசும் பொழுது மாணவர்கள் காகிதம் பயன்பாடுகளை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தினந்தோறும் மாணவர்கள் தினசரி நாளிதழிலே வாசிக்க வேண்டும் இதனால் பொது அறிவு மேம்படும் எனவும் மேலும் காகித பயன்பாட்டினை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் காகிதம் பற்றிய பயன்பாடுகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேசன் செயலாளர் ஞானகுமார் பொருளாளர் செந்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலைச்செல்வன் ரவி மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News