மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி.
மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 06:08 GMT
ஆணழகன் போட்டி
பெரம்பலூரில் அமைச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் மற்றும் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி இணைந்து நடத்தும் மாவட்ட அளவில் எட்டாம் ஆண்டு ஆணழகன் போட்டி எளம்பலூர் சாலை, உப்போடை பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 29ஆம் தேதி மாலை நடைபெற்றது. பல்வேறு எடை பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு தங்களது கட்டுடலை மேம்படுத்தி காட்டினார்கள், இதில்கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டன, இதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், 17 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் துரை காமராஜ், சமூக ஆர்வலர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள் இப்போட்டியில் இறுதியாக மிஸ்டர் பெரம்பலூர் ஓவரால் சாம்பியன் வின்னராக ராக்பிட் ஜிம்மை சேர்ந்த அஜித்தும், ரன்னராக அதே ராக்பிட் ஜிம்மை சேர்ந்த வெங்கடேசனும் தேர்வு செய்யப்பட்டனர், இவர்களுக்கும் பரிசு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மிஸ்டர் இந்தியா தேசிய நடுவர்கள், திருச்சியை சேர்ந்த சிவராமசுதன், முகமது உமர் பாரூக் மற்றும் தமிழ்நாடு மாநில நடுவர் திருச்சி கணேசன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர், மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைச்சர் ஆணழகன் சங்க நிர்வாகிகள் உடற்கல்வி ஆசிரியர்கள் திமுக பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.