மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திருவிழா

Update: 2023-07-17 08:22 GMT

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீனதயாள் உபாத்தியாயா

கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்திலுள்ள படித்து

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மேற்படிப்பு படிக்க வசதியற்ற

இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும்,

DDU GKY, TNSDC, PMKVY மற்றும் RSETI போன்ற அரசு துறையின் கீழ் வழங்கப்படும்

இலவச திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டும்

மாவட்ட அளவிலான இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திருவிழா நாமக்கல்

மாவட்டம் மோகனூர் ரோட்டில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில்

07.07.2023 அன்று நடத்தப்பட்டது. இம் முகாமில் 54 வேலை வழங்கும் நிறுவனங்கள்

மற்றும் இலவச திறன் பயிற்சிகள் வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 1,211 இளைஞர்கள் மற்றும்

இளம்பெண்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தனியார் வேலைகளுக்கு 208

இளைஞர்களும் பல்வேறு அரசு துறைகளின் வாயிலாக வழங்கப்படும் இலவச திறன்

பயிற்சிகளுக்கு 203 இளைஞர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவ்விழாவில் தேர்வு செய்யப்பட்ட 411 இளைஞர்களுக்கு பணி நியமன

ஆணைகள் மற்றும் இலவச பயிற்சிகளில் சேருவதற்கான பயிற்சி ஆணைகள்

வழங்கப்பட்டது. மேலும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற

இளைஞர்கள் இது போன்று நடத்தப்படும் வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு

பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News