குமாரமங்கலம் மஹேந்திரா கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள்
நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்ப சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இரண்டாவது சேம்பியன்ஷிப் போட்டிகள் திருச்செங்கோடு குமாரமங்கலம் மஹேந்திரா கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் PRD நிறுவனங்களின் மேலான இயக்குனரும், PRD ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரும், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை தலைவருமான T.T.பரந்தாமன் துவக்கி வைத்தார்,
இந்நிகழ்ச்சியில் வேலா TMT கம்பிகள் நிறுவனத்தின் மோகன்ராஜ்,
மஹேந்திரா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஸ்டாலின் பாக்கியநாதன், வி.எஸ்.பி டூல்ஸ் வெங்கடேஷ் மற்றும் நாமக்கல் மாவட்ட அமைச்சூர் சிலம்ப சங்க நிர்வாகிகள், சதிஸ்குமார், நவீன்குமார், ஏபிஜே கலாம் சிலம்ப தற்காப்பு கலை பயிற்சி மைய ராஜேந்திரபிரபு, தமிழன் ஸ்போர்ட்ஸ் கிளப் ஜெயக்குமார், சர்வதேச சிலம்ப நடுவர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர். இப் போட்டியில் 200 க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பரிசை ஏ.பி.ஜே சிலம்ப பள்ளியும், இரண்டாம் பரிசை வி. ஸ்கூல், மூன்றாம் பரிசினை பாவை பள்ளியும் பெற்றது.