திருச்செங்கோட்டு பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

Update: 2023-08-31 07:14 GMT

போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில்தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் முன்பக்க கண்ணாடியில் ஒளிரும் வண்ண விளக்கு பட்டைகள் அகற்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சரவணன் ஆய்வாளர் பாமாப்பிரியா ஆகியோர் அதிரடிநடவடிக்கை. ஓட்டுநர், நடத்துநர் உரிமங்கள் ஆய்வு, அடுத்த முறை ஒளிரும் வண்ண விளக்கு பட்டைகள் இருந்தால் ஓட்டுநர் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செங்கோடு வழியாக செல்லும் பல பேருந்துகளிலும், தொலைதூரம் செல்லும் சில அரசு பேருந்துகளிலும் முன்பக்க கண்ணாடிகளில் ஒளிரும் வண்ணவிளக்குகள் கொண்ட பட்டைகள் பொருத்தியிப்பதாகவும் இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப் படுவதாக வந்த புகாரை அடுத்து திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சரவணன், ஆய்வாளர் பாமாப்பிரியா ஆகியோர் அதிரடியாக திருச்செங்கோடு பேருந்த நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது10க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரச பேருந்தகளில் இருந்த வண்ணவிளக்கு பட்டைகளை அகற்றினர். பேருந்து எண் வழித்தடம்மற்றும் ஒட்டுநர், நடத்துநர் உரிமங்களை பெற்று பதிவு செய்து கொண்டதோடு இந்த முறை அறிவுறுத்துவதோடு அடுத்த முறை பிடிபட்டால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags:    

Similar News