புதுச்சத்திரம் ஒன்றியத்தில் குப்பை சேகரிக்கும் மின்கலன் வண்டி
பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் மின்கலன் வண்டி வழங்கும் நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் கலந்து கொண்டு கதிராநல்லூர், கண்ணூர்பட்டி, காரைக்குறிச்சிபுதூர், கல்யாணி, நாட்டாமங்கலம், உடுப்பம், ஏ.கே.சமுத்திரம், கரடிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் மின்கலன் வண்டிகளை வழங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் M.P.கௌதம், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தி வெங்கடாசலம், துணைத்தலைவர் ராம்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் தரணிபாபு, விவசாய அணி மாவட்ட பொறுப்பளர் மனோகரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் நாகராஜன், வளர்மதி, பூங்கொடி வரதராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், சுந்தரம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், தூய்மை பணியாளர்கள், திமுக சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.