ஊழியர்களுக்கு Royal Enfieled பரிசாக வழங்கிய முதலாளி.!!
ஊழியர்களுக்கு Royal Enfieled பரிசாக வழங்கிய முதலாளியால் ஊழியர்கள் சந்தோஷத்தில் திகைத்தனர்.;
By : King 24x7 Website
Update: 2023-11-01 13:28 GMT
இருசக்கர வாகனம் பரிசாக வழங்கிய முதலாளி
இருசக்கர வாகனம் பரிசாக வழங்கிய முதலாளி
தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நிறுவனங்கள் பல ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் பணியையும் துவங்கியுள்ளன. ஆண்டுதோறும் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகை,இனிப்பு, கார வகைகளுடன் பட்டாசு புதிய ஆடைகளை பல நிறுவனங்கள் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி பகுதியில் உள்ள தேயிலை தோட்ட நிர்வாகம் ஊழியர்களுக்கு Royal Enfield பைக்கை கொடுத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் வழங்கும் தீபாவளி போனஸ் போல் இந்த ஆண்டும் தங்கள் நிறுவனம் ஊக்கத்தொகை வழங்குவார்கள் என எதிர்பார்த்த ஊழியர்கள் முதலாளி விலை உயர்ந்த Royal Enfield பைக்கை வழங்குவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்போது ஊழியர்கள் இடையே உரையாடி பைக் சாவிகளை வழங்கி ஊழியர்களுடன் முதலாளியும் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஜாலி ரைட் சென்றார். தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு ஏற்றவாறு டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், உள்ளிட்டவற்றை வழங்கி வந்த நிறுவனம் இந்த முறை விலை உயர்ந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை ஊழியர்களுக்கு வழங்கியது. அந்த நிறுவனத்தில் பணி புரியும் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.