நோய் தடுப்பு பணியில் பூச்சியியல் துறை அலுவலர்கள்

Update: 2023-08-30 09:25 GMT

நோய் தடுப்பு பணி

ராசிபுரம் நகரில் நோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூச்சியியல் துறையினர் வீடுகள் தோறும் ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம் மண்டல பூச்சியியல் துறை வல்லுனர் எஸ்.மணி தலைமையிலான குழுவினர் ராசிபுரம் மேட்டுத்தெரு, வெங்கடசாமி தெரு, உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.

வீடுகள், தண்ணீர் தேங்கும் பகுதியில் கொசு பரவுதல் குறித்தும், டெங்கு, மலேரியா கொசு பரவும் வகையில் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

தண்ணீர் தொட்டிகள் கால்வாய்களிலும், பேரல் ட்ரம் மற்றும் கிணறு, தொட்டி உள்ளிட்ட தண்ணீர் தேங்கியுள்ள இடம் வரை கொசு உற்பத்தி மற்றும் பரவுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

பூச்சியியல் துறை வல்லுநர்களுடன் ராசிபுரம் நகராட்சி சுகாதாரத்துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் தண்ணீரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் , அதை திறந்து வைக்க கூடாது பாதுகாப்பான முறையில் தண்ணீரை பயன்படுத்த வேண்டும், தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பான முறைகள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் வீட்டில் இருந்த பெண்கள் ஆகியோரிடம் எடுத்துக் கூறினர்.

Tags:    

Similar News