வாழவந்தியில் அரசு பள்ளி கட்டிடம் திறப்பு முன்னாள் அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்
Update: 2023-09-09 05:35 GMT
அரசு பள்ளி கட்டிடம் திறப்பு
பரமத்தி வேலூர் தொகுதிக்குட்பட்ட மோகனூர் ஒன்றியத்தில் வாழவந்தி ஊராட்சியில் சட்டமன்ற நிதியிலிருந்து அரசுப் பள்ளிக்கு கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்தின் துவக்க விழாவில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் S.சேகர் முன்னிலையில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி திறந்து வைத்தார்.