கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கண் தொடர்பான பிரிவு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது குறுகிய காலத்தில் 150 க்கும் மேற்பட்ட கண் புரை அறுவை சிகிச்சைகளை செய்து பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சார்பாக அன்னை தெரசா நினைவு தினத்தை ஒட்டி கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருச்செங்கோடு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார் மருத்துவர் மகேஸ்வரன், செவிலியர் வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி இறுதியாக அரசு மருத்துவமனையை அடைந்தது. சுமார் 100 செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் இந்த பேரணியில் பங்கேற்று கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் கண் இல்லாதவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முன்னதாக அன்னை தெரசாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவப்படத்திற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.