தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2023-08-22 12:05 GMT

கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் 

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் தங்கபாண்டியன் அவர்களின் மகன் செல்வன் பரதன் மற்றும் மகள் செல்வி தீபா ஆகியோர் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம்‌ முன்னிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட தங்கபாண்டியன் மகன் செல்வன் பரதன் மற்றும் மகள் செல்வி தீபா ஆகியோரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்து, அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி, தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கண்டுள்ள நபர்களுக்கு இயன்முறை சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதை மருத்துவர்களிடம் கேட்டறிந்து, தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் அவர்களுக்கு மோகனூர் வட்டம், பேட்டபாளையத்தில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும், தனது சொந்த நிதியிலிருந்து பராமரிப்பு தொகையாக ரூ.10,000/-, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வழங்கினார். மேலும், மாதந்தோறும் 25 கிலோ அரிசி, உளுந்து, துவரை பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட வீட்டு மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் அவர்களுக்கு உறுதியளித்தார். மேலும், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம்‌ தனது சொந்த நிதியிலிருந்து ரூ.78,000/- மதிப்பிலான படுக்கைகள் மற்றும் சக்கர நாற்காலிகளில் இருந்து மாற்றுவதற்கான இயந்திரத்தினை வழங்கினார்.

தொடர்ந்து,. மேலும், வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோகனூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரமோகன், மோகனூர் வட்டாட்சியர் மணிகண்டன், மோகனூர் பேரூராட்சி தலைவர்

வனிதா மோகன், செயல் அலுவலர் கோமதி, மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், அட்மாக்குழு தலைவருமான பெ.நவலடி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News