SC, ST மாணவர்களுக்கு வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி - மாவட்ட ஆட்சியர் ச.உமா தகவல்
மாவட்ட ஆட்சியர் ச.உமா தகவல்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணாக்கர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( SBI ) நடத்தும் வங்கி தேர்வில் வெற்றி பெற Veranda Race பயிற்சி நிலையத்தின் மூலம் இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான CRPD /PO/2023-24-19 4 அதிகாரபுர்வமான அறிவிப்பு bank.sbi/careers/current-openings என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் துணை மேலாளருக்கான 2000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Such as B.A., B.Com., B.Sc., B.Tech. etc., ) முடித்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணாக்கர்களும் 27.09.2023-ம் தேதிக்குள் bank.sbi/careers/current-openings என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும் இப்பதவிக்கான தேர்வு முறையானது முதற்கட்டத்தேர்வு, முதன்மை, நேர்காணல் மற்றும் குழுப்பயிற்சிகள் ( Prelims, Mains, Interview and Group Exercises ) என மூன்று நிலைகளில் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்வானது – 2023 நவரம்பரிலும், முதன்மை தேர்வானது 2023-டிசம்பர் மற்றும் 2024 ஜனவரியிலும் நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகளுக்கான அழைப்பு 2024-ஜனவரி மற்றும் பிப்ரவரியிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கான ஆரம்ப கால மாத ஊதியம் ரூ.41,960/- ஆகும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) துணை மேலாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு Veranda Race பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சியை வழங்கிட தாட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சிக்கென கட்டணம் தாட்கோ மூலமாக ஏற்கப்படும். தகுதியுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்கள் அனைவரும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.