நாமக்கல்லில் இலவச கண் சிகிச்சை முகாம்

Update: 2023-08-28 05:10 GMT

கண் சிகிச்சை முகாம் 

நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கம், நாமக்கல் மெட்ரோ அரிமா சங்க அறக்கட்டளை, குவாலிட்டி ரோலிங் ஷட்டர்ஸ, பூமகள் சில்வர் பேலஸ் ஆகியோர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று (ஆகஸ்ட் 27) ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை நடைபெற்றது.

இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் இலவசமாக பரிசோதிக்கப்பட்டது.

இதில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் கல்லூரி முதல்வர் மா.கோவிந்தராசு தலைமையில் பொதுமக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு டோக்கன் வழங்கி உதவி செய்தனர்.

இதில் 500 க்கும் மேற்பட்ட முதியோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இலவசமாக கண் சிகிச்சை பெற்றதோடு அனைத்து பரிசோதனையும் பெற்றுக் கொண்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 200 க்கும் மேற்பட்ட நபர்கள் இலவச அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்க நிர்வாகிகள் சிவசண்முகம், தினேஷ், நடராஜன், திருஞானசம்பந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News