ஆடு வளர்ப்பில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி

Update: 2023-08-03 06:47 GMT

ஆடு வளர்ப்பு

ஆடுகளின் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதில் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் வரும் 8 ஆம் தேதி முதல் 3 நாட்கள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இது குறித்த நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதியுதவியுடன், ஆடுகளின் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து 3 நாட்கள் இலவச பயிற்சி, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின், கால்நடை உற்பத்தி மேலாண்மை துறையில் வருகிற 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் 10 ஆம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.

ஆடுகளின் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து நடைபெறும் இந்த பயிற்சியில், ஆடுகளின் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களான பரண் மேல் ஆடு வளர்ப்பு, வறட்சி காலங்களில் தீவன மேலாண்மை முறைகள், ஆடுகளுக்கான மாற்றுத் தீவனப்பொருட்கள், ஆடு வளர்ப்பில் மேய்ச்சல் நிலத்தின் பங்கு. இறைச்சிக்கான கிடா குட்டிகள் வளர்ப்பு, குட்டிகளை இறப்பிலிருந்து காப்பாற்றி அதிக லாபம் பெறும் வழிமுறைகள், செயற்கை முறை கருவூட்டல், ஆடுகளைத் தாக்கும் நோய்கள், தடுப்பூசி அளித்தல் மற்றும் ஒட்டுண்ணிதாக்கமும் தடுக்கும் முறைகளும், சுகாதாரமான ஆட்டிறைச்சி உற்பத்தி, மதிப்பு கூட்டிய ஆட்டிறைச்சிப் பொருட்கள் தயாரித்தல், பண்ணைக் கழிவுகளைக் கொண்டு மட்கும் உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம், இன்சூரன்ஸ் வழிமுறைகள், கடன் உதவி மற்றும் மானியத் திட்டங்கள் பற்றிய விரிவான தொழில்நுட்பம் மற்றும் செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், தொழில் முனைவோர்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு இடுபொருட்கள், சான்றிதழ்கள் மற்றும் புத்தககங்கள் வழங்கப்படும்.

ஆர்வம் உள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள் முன்பதிவு செய்ய 04286-266388 என்ற தொலைபேசி எண் அல்லது 801251 5699 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News