நமக்கு நாமே திட்டத்திற்கு நிதி உதவி - நகர மன்ற தலைவரிடம் வழங்கினர்

Update: 2023-09-12 05:15 GMT

 நிதி உதவி வழங்கல் 

குமாரபாளையம் 15 வது வார்டு குள்ளங்காடு கலைவாணி தெருவில் சிறுபாலம் அமைத்து மழை நீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது. திட்டத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பு தொகையான ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்திற்க்கான காசோலையை அப்பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ் நாகராஜ் என்பவர் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் முன்னிலையில் நகர மன்ற தலைவர் த‌.விஜய்கண்ணனிடம் வழங்கினர். இந்நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன், ஜேம்ஸ், அழகேசன், வேல்முருகன், திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், கந்தசாமி, விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News