எழிலி உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் - மாவட்ட ஆட்சியர் ச.உமா பங்கேற்பு

Update: 2023-09-21 05:20 GMT

மாவட்ட ஆட்சியர் ச.உமா பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், நெய்க்காரன்பட்டி, தனியார் திருமண மண்டபத்தில் எழிலி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்ததாவது: எழிலி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்ட சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட நிதி உதவிகள், பயிற்சிகள், உருவாக்கப்பட்ட சொத்துகள் பற்றியும் அந்த சொத்துக்களை முறையாக பராமரித்து அதனை அனைவருக்கும் பயன்படும் வகையில் உபயோகித்து தொழில் நடவடிக்கையில் உயர வேண்டும். மேலும் புதிய பங்குதாரர்களை இணைத்தல், ஒற்றுமையுடன் செயல்படுதல், அரசின் துறைகளான வேளாண், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு மற்றும் இதர துறைகளில் இருந்து உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் மூலம் வங்கி வாயிலாக தொழில் ஈட்டும் வகையில் கடன் பெறவும் வாய்ப்பு உள்ளது. மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி சந்தை நிலவரங்களை அறிந்து விற்பனையை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்தார்.

முன்னதாக எழிலி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டார். கூட்டத்தில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வணிக நடவடிக்கைகள், பொருளீட்டும் நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப் போகும் தொழில் நடவடிக்கைகள், நிறுவன இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள் மாற்றம், வணிகத் தேவைக்கென நிதியங்களை நாடுதல் உள்ளிட்ட நிறுவன செயல்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் கணேசன், பட்டுவளர்ச்சிதுறை உதவி இயக்குநர் முத்துபாண்டியன், மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்துகாட்டுவோம் திட்டம்) கங்காதரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வாழ்ந்துகாட்டுவோம் திட்ட மாவட்ட மற்றும் வட்டார அலகு அலுவலர்கள், தொழில்சார் சமூக வல்லுநர்கள், பங்குதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News