மங்களபுரம் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் அரசு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மங்களபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார்.
முகாமில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு 538 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 1 புதிய திட்டப் பணிக்கு நிர்வாக அனுமதியினையும் வழங்கினார்.
இம்முகாமில், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றுவுடன் மக்களின் நலனை கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு புதிய திட்ட பணிகளை வழங்கியுள்ளார். இராசிபுரம் மக்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் சிகிச்சைகள் பெரும்பகையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ராசிபுரத்தில் அறிவிக்கப்பட்டு கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது. சென்னையில் உள்ள தொழில்நுட்ப பூங்கா போன்று சிறிய தொழில்நுட்ப பூங்கா ராசிபுரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நாமகிரிப்பேட்டை பகுதிக்கு ஒருங்கிணைந்த வேளாண்மை மையம் கொண்டு வரப்படவுள்ளது. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.68.00 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு,
முதலமைச்சர் சாலை மேம்மபாட்டு திட்டத்தின் கீழ் ரூ.92.00 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க ரூ.79.00 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்மபாட்டு நிதியின் கீழ் நியாய விலைக்கடை, பொதுக் கழிப்பிடம், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டும் பணிகளும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்மபாட்டு நிதியின் கீழ் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் பகுதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு பயனடைய வேண்டுமென்ற நோக்கத்துடன் மாதம் தோறும் ரூ.1000/- வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். தற்போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000/- வழங்க அனைத்து பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. தகுதியுள்ள அனைத்து பயனாளிகளும் இம்முகாம்களில் தவறாமல் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்திட வேண்டும் என்றார்.
தொடர்ந்து, வருவாய் துறை, தாட்கோ, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட முன்னோடி வங்கி, மகளிர் திட்டம், மாவட்ட குழந்தைகள் அலகு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட வழங்கல் துறைஉள்ளிட்ட துறைகளின் சார்பில் மொத்தம் 538 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வழங்கினார்.
மேலும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் 1 புதிய திட்டப்பணிக்கு நிர்வாக அனுமதியினை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மங்களபுரம் ஊராட்சி மன்றத்தலைவரிடம் வழங்கினார்.
முன்னதாக, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, பட்டு வளர்ச்சி துறை, சமூக நலத்துறை, தாட்கோ, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட துறை, முதலமைச்சர் மற்றும் பாரத பிரதமரின் மருத்துவ அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் உள்ளிட்ட அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசுவாமி, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், இணைபதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) த.செல்வகுமரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், வேளாண்மைத்துறை (இணை இயக்குநர்) எஸ்.துரைசாமி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) மரு.நடராஜன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கே.கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் என்.முருகேசன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், உதவி ஆணையர் (தொழிலாளர்) எல்.திருநந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கே.முருகன், துணை இயக்குநர்கள் மரு.பூங்கொடி (சுகாதார பணிகள்), மரு.ஜெயந்தினி (தொழுநோய்), மரு.வாசுதேவன் (காசநோய்), மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன், பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முத்துப்பாண்டியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.