வட்ட அளவிலான தடகள போட்டியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் சாம்பியன்

Update: 2023-09-07 05:32 GMT

 மாணவியர் சாம்பியன் பட்டம் 

வட்ட அளவிலான தடகள போட்டியில் குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் சாம்பியன் பட்டம் வென்றனர். திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். 14 வயதிற்குரிய மாணவிகள் பிரிவில் மவுனிகா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம், 400 மீட்டரில் இரண்டாமிடம், 200 மீட்டரில் முதலிடம் வந்து, 13 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவியரை தலைமை ஆசிரியை கலைச்செல்வி, பி.டி.ஏ. மற்றும் எஸ்.எம்.சி. நிர்வாகிகள் மாவட்ட அளவில் வெற்றி பெற பாராட்டினர்.

Tags:    

Similar News